⚠️ சைபர் குற்றவாளிகள் கையாளும் பொதுவான தந்திரங்கள் – எச்சரிக்கை வழிகாட்டி 1️⃣ வங்கிகள் ஒருபோதும் தொலைபேசியில் வங்கி விவரங்களை கேட்பதில்லை. வங்கி அதிகாரி என கூறி அழைத்து தகவல் கேட்டால் உடனே அந்த அழைப்பை தவிர்க்க வேண்டும். 2️⃣ கீழ்கண்ட எந்த விவரங்களையும் யாரிடமும் பகிரக்கூடாது: A/c Number, ATM / Debit Card Number, PIN, CVV, OTP, Net Banking Password, Credit Card Number. இவற்றை தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும் அபாயம் உள்ளது. 3️⃣ சுகாதாரத் துறை / அரசு உதவி என்ற பெயரில் வரும் அழைப்புகள்: தடுப்பூசி உதவி, அரசு நலத்திட்டம் என கூறி Bank A/c, Aadhaar, PAN, OTP கேட்பது மோசடி. OTP கொடுத்தால் உங்கள் கணக்கு காலியாகலாம். 4️⃣ பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக வரும் SMS / Link-கள்: “நீங்கள் செய்யவில்லை என்றால் LINK-ஐ கிளிக் செய்யவும்” என்ற தகவல்களை நம்பாதீர்கள். Link-ஐ கிளிக் செய்யாமல், நேரில் வங்கியை அணுகுங்கள். 5️⃣ KYC / PAN / Aadhaar Update என்ற SMS / Link-கள்: எந்தவொரு Link மூலமும் Update செய்ய வேண்டாம். தேவைப்பட்டால் வங்கிக்கு நேரில் சென்று செய்யுங்கள். 6️⃣ செல்போன் / ATM Card தொலைந்தால் அல்லது திருடப்பட்டால்: உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு Card / Account-ஐ BLOCK செய்யுங்கள். 7️⃣ இணையத்தில் கிடைக்கும் Customer Care எண்கள்: பல எண்கள் போலியானவை. Screen Share, Link, OTP கேட்பவர்கள் உங்கள் கணக்கை ஹேக் செய்ய முயல்கிறார்கள். 8️⃣ தனிப்பட்ட புகைப்படங்கள்: ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். Photo Morphing செய்து மிரட்டல், பணம் பறிப்பு நடக்கலாம். 9️⃣ Facebook / Social Media போலி கணக்குகள்: உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி Account உருவாக்கி பணம் கேட்கலாம். பணம் அனுப்பும் முன் நேரில் அல்லது போனில் உறுதி செய்யுங்கள். 🔟 Social Media Privacy Settings: யார் உங்கள் தகவல்களை பார்க்கலாம் என்பதை கட்டாயம் Privacy Settings-ல் கட்டுப்படுத்துங்கள். 1️⃣1️⃣ Live Location / Daily Updates: உங்கள் இருப்பிடம், தினசரி நடவடிக்கைகளை Live-ஆக பகிர்வதை தவிர்க்கவும். 1️⃣2️⃣ Social Media Link-கள்: Link-ஐ கிளிக் செய்தால் Bank Account Hack ஆகும் வாய்ப்பு அதிகம். 1️⃣3️⃣ Public USB Charging Points: Juice Jacking மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் – தவிர்க்கவும். 1️⃣4️⃣ Public Wi-Fi: பொது Wi-Fi பயன்படுத்தும்போது Mobile Hack ஆகும் அபாயம் உள்ளது. 1️⃣5️⃣ குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை: Social Media Ads மூலமான Shopping-ல் Fake Website ஆக இருக்கலாம் – கவனம். 1️⃣6️⃣ Cell Phone Tower Scam: “மாதம் ₹30,000 வாடகை, ₹30 லட்சம் முன்பணம்” போன்ற தகவல்கள் முழுமையான மோசடி. 1️⃣7️⃣ Apps Download: அனுமதிகள் (Permissions) அறியாமல் App-களை Download செய்ய வேண்டாம். 1️⃣8️⃣ ஆர்வத்தை தூண்டும் News Link-கள்: பின்னால் Data Theft / Money Fraud கும்பல் இருக்கலாம். 1️⃣9️⃣ அதிக லாபம் தரும் முதலீடுகள்: “தினசரி 1% / மாதம் 30%” லாபம் யாராலும் தர முடியாது – மோசடி. 2️⃣0️⃣ Part Time Job / Work From Home Scam: முதலில் சிறு தொகை கொடுத்து நம்ப வைத்து, பின்னர் பெரிய தொகையை பறிப்பார்கள். விளம்பரங்களை பார்த்து ஏமாறாதீர்கள். 🛑 நினைவில் கொள்ளுங்கள்: சிறு லாபம் கிடைத்தது என்பதற்காக பெரிய தொகையை இழக்காதீர்கள். எச்சரிக்கையே சிறந்த பாதுகாப்பு.